40அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த பெண்: விரைந்து செயற்பட்ட படையினர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் இன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 40 அடி ஆழம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில் 6ஆவது சிங்க படையணியின் படையினர் மேற்கொண்ட தீவிர மீட்பு நடவடிக்கையை அடுத்து அவர் காப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படையினரால் காப்பற்றப்பட்ட பெண் விஸ்வமடு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகின்றது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.