கொலைக்குற்றச்சாட்டு! அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பொல்லால் தாக்கி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தரையும் அவரது மகனையும் கிரியுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகம்பள பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் கனிஷ்க தில்ஷான் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய பதில் நீதவான் கெலும் ஹெட்டிகமகே சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்ப விசாரணைகளை நடத்தியுள்ளார். அத்துடன் சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.