பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி

Report Print Banu in சமூகம்

உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.

இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு கை மற்றும் கால் செயலிழந்துள்ள நிலையில், தலையில் குண்டு துகள்களுடன் தன் ஒவ்வொரு நாளையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னாள் போராளி ஒருவர் கொண்டு செல்கின்றார்.

இவர் தனது ஆறா துயரங்களையும் கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற நிகழ்ச்சியினூடக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் +94212030600/ +94767776363 எனும் தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.