திருகோணமலையில் மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் இரு குழுக்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை, சமுத்திரகம பகுதியைச் சேர்ந்த 31, 19, 21 மற்றும் 20 வயதுகளையுடைய ஆறு பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையில் மீன்பிடி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.