வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த 3 மாத காலப்பகுதியில் 305 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா நகரம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ராணி மில் வீதி, வைரவபுளியங்குளம், கற்குழி, தேக்கவத்தை, உள்வட்ட வீதி, சந்தை சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அவதானிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டெங்கு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.