கோட்டாபயவின் வெற்றியால் ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தினால் ஊழியர் ஒருவர் ஹோட்டல் உரிமையாளரான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நகரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தனது உணவகத்தில் கொத்து ரொட்டி செய்யும் ஊழியரிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் தான் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தோல்வியடைந்தால் உரிமையாளர் இடத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய உரிமையாளர், தோல்வி அடைந்தால் உணவகத்தில் கொத்து ரொட்டி செய்யும் பணிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர் பந்தயத்தில் தோல்வியடைந்து கொத்து ரொட்டி செய்யும் பணிக்கும், அந்த பணியில் இருந்த ஊழியர் கடையின் உரிமையாளரின் ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.