போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை! பாதுகாப்பு செயலாளர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Report Print Murali Murali in சமூகம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின்போது, போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் பொதுமக்களுக்கு அவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு தேவையான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு செயலாளர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. எம் ஆர் லத்தீப் அவர்களும் கலந்துகொண்டார்.