வாழைச்சேனையில் வீசிய காற்றினால் பல வீடுகள் சேதம்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் பதினொரு வீடுகள் மற்றும் இரண்டு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுன.

மேலும் ஒருவர் உயிழர்ந்துள்ளதுடன், வேறு எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சுழல் காற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக என வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மேலும் தெரிவித்தார்.