சட்டவிரோத பதாதைகளை உடனடியாக அகற்ற உத்தரவு

Report Print Sujitha Sri in சமூகம்

முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பதாதைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் பிரிவின் சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொறுப்பாய்வாளர் நாயகம் நிமல் பெரேராவினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சட்டவிரோத பதாதைகள் எனும் போது உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள பதாதைகள் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் நாட்களில் பதாதைகளை காட்சிப்படுத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணுமாறு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.