தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்

Report Print Banu in சமூகம்

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை தடைசெய்யக்கோரி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தடைகளையும் மீறி இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நுழைவாயிலை உடைத்து பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ளதால் , அப்பகுதியில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.