சமாதானத்தை வலியுறுத்திய நடைப்பயணம் வவுனியாவை வந்தடைந்தது

Report Print Theesan in சமூகம்

நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்தி படை வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் இன்று வவுனியாவை வந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் இந்த நடைப்பயணம் ஆரம்பமானது.

நான்காம் நாளான இன்று வவுனியாவை வந்தடைந்த இப்பயணம் இன்று மதவாச்சியை சென்றடையவுள்ளது.

அந்தவகையில், சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடைப்பயணம் கதிர்காமத்தில் நிறைவடைய உள்ளது.