ஒட்டுசுட்டான் படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் 1990ஆம் ஆண்டு விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வன்னி குரோஸ் தாயக நினைவேந்தல் பேரவையின் ஒழுங்கமைப்பில் இன்றையத் தினம் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி அன்று 12 அப்பாவி பொதுமக்கள் இலங்கை விமானப் படையின் கோர விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நினைவு கூறும் முகமாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.