ஓமானில் சித்திரவதைக்குட்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Report Print Kamel Kamel in சமூகம்

ஓமானில் சித்திரவதைக்கு உட்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த 42 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சம்பளம் இன்றியும் பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளை எதிர்நோக்கியும்வந்த வீட்டுப் பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சுமார் இரண்டாண்டுகளாக வீட்டுப் பணிப் பெண்களாக ஓமானில் கடமையாற்றிய இந்தப் பெண்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு இலக்கான பெண்கள் வீடுகளிலிருந்து தப்பிச் சென்று ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.