யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Report Print Sumi in சமூகம்

யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது.

ஈகைச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரையாற்றியுள்ளார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,

எம் மண்ணில் இன ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழிமுறை ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது.

இந்த ஆயுதப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் மற்றும் யுவதிகள் தம் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். அவர்களது தியாகங்கள் ஈடு இணையற்றது.

இந் நினைவு கூறல் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். போரில் இலட்சக்கணக்கான உயிர்களை மொத்தத்தில் இழந்துள்ளோம். அவர்களுக்காகவும் அஞ்சலிக்கின்றோம்.

இந்த அடிப்படையில், ஒவ்வொருவரும் தம் உயிரைத் தியாகம் செய்யும் போது அவர்கள் எமது மக்கள் சுபீட்சமாக சுதந்திரமாக வாழவேண்டும் என்ற உயரிய கனவைத்தான் கொண்டு மீளாத்துயில் கொள்கின்றனர். அவர்களை நினைவு கூறுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.