சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர்கள் கைது

Report Print Suman Suman in சமூகம்

சட்ட விரோதமாக மரகுற்றிகளை ஏற்றிச்சென்ற இருவர் பூநகரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பூநகரி புலானாய்வு பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலுக்கு அமைய பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கண்டர் ரக வாகனத்தில் கடத்திச் செல்ல முற்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காட்டு பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையில் பெறுமதிவாய்ந்த முதிரைகுற்றிகளை அரிந்து சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ் மாவட்டத்திற்கு சந்தேகநபர்கள் கடத்த முற்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபாய் அளவில் உள்ளது என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.