கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாடுகள்

Report Print Varunan in சமூகம்

மாவீரர் தினமான இன்று அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மழைக்கு மத்தியிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவீரர்களின் பெற்றோர்களாலும், உறவினர்களாலும் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்கனவே ஆயத்த பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.