யூ டியூப் செய்தி தொகுப்பாளர் விசாரணைக்கு அழைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

யூ டியூப் சனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் துஷார விதாரண என்பவரை விசாரணையில் ஆஜராகுமாறு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

உடனடியாக குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. துஷாரா விதாரண நிதியமைச்சின் ஊடகப் பிரிவின் இணைப்பாளராக கடமையாற்றினார்.

அதேவேளை த லீடர் என்ற யூ டியூப் சனலின் செய்தி வாசிப்பாளர் சஞ்சய தனுஷ்க நேற்று குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.