மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து துயிலுமில்லங்களிலும் ஏற்பாடு

Report Print Varun in சமூகம்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மாவீரர்களை நினைவு கூறுமுகமாக இன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களில் பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

எனவே இன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களில் பல அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.

இன்றைய தினம் வடமாகாணத்தின் பிரதான மாவீரர் ஞாபகார்த்த நிகழ்வு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.

கிளிநொச்சி,கனகபுரம்,முல்லைத்தீவு அளம்பில், முள்ளிவாய்க்கால், மல்லாவி, வவுனியா, ஈச்சங்குளம், மன்னார் - மடு ஆகிய பகுதிகளில் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.