கன மழையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு மாவட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மவ்வட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடடர்ச்சியான மழையால் மட்டக்களப்பில் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக மட்டக்களப்பு - நாவற்குடா கிழக்கு பகுதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நாவற்குடா கிழக்கு மெதடிஸ்த முன்பள்ளி கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

பல வருடங்களாக இவ்வாறு மழைகாலங்களில் தமது பகுதிகள் நீரிழ் மூழ்கும் நிலையுள்ளபோதிலும் இதுவரையில் தமது பகுதிகளில் வடிகான்களை அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் நாவற்குடாவில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.இந்த பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குறித்த பகுதியில் வடிகான்களை அமைப்பதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.