வடக்கு, கிழக்கு எங்கும் மாலை 6.05 மணிக்கு ஈகைச் சுடரேற்றல்!

Report Print Rakesh in சமூகம்

தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை, வீரமறவர்களை, மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகியுள்ளனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இம்முறை நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.

மாவீரர் நாளை எழுச்சியுடன்அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

Latest Offers