கண்ணீரால் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் ஆரம்பம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் சற்று முன்னர் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

நான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது, 15,000இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண்ணீருடன் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செய்து வருகின்றனர்.