யாழில் கடல்நீர் ஏரிக்குள் பாய்ந்த வாகனம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளான வாகனம் கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. ஹார்ட் பிஆர் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பெருந்தொகையான பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடல்நீர் ஏரிக்குள் பாய்ந்துள்ளது.

இதன்போது சாரதி எதுவித காயங்களும் இன்றி தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.