தாய்மார்களின் கண்ணீரால் நனையும் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்

Report Print Varunan in சமூகம்

புதிய இணைப்பு

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் தற்போது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா என்பவர் இதன்போது பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

அம்பாறை, கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்காக அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மாவீரர்களை நினைவு கூர எண்ணூற்றுக்கு மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டு, உணர்ச்சி பெருக்கோடு காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆடம்பரம் இன்றி மாவீரர்களை நினைவுகூருமாறு பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.