தொடர்ந்தும் விளக்கமறியலில் நேவி சம்பத்

Report Print Steephen Steephen in சமூகம்

கொட்டாஞ்சேனை உட்பட கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினட் கமாண்டார் நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் 17 சந்தேக நபர்களில் 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரியப்படுத்தியதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் லெப்டினட் கமாண்டார் சம்பத் முனசிங்க, கடற்படை புலனாய்வு பிரிவின் கொமடோர் சுமித் ரணசிங்க, புலனாய்வு பிரிவின் அதிகாரி நளின் பிரசன்ன, கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியர் அத்மிரல் டி.கே.பி. தசநாயக்க, ராஜபக்ச பத்திரனலாகே கித்சிறி, சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனாரத்ன, அண்ணாச்சி என்ற உபுல் சமிந்த, நந்தபிரிய ஹெட்டிஹெந்தி, வர்ணகுலசூரிய அன்டன் பெர்னாண்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.