கோறளைப்பற்று பிரதேசசபையால் தமிழர் பகுதிகள் புறக்கணிப்பு

Report Print Kumar in சமூகம்

கோறளைப்பற்று பிரதேசசபையினால் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் தலைவருமான கி.சேயோன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்துதெரிவித்த அவர்,

கடந்த தேர்தல் காலத்தின்போது முஸ்லிம் தலைவர்களையும் அதன் உறுப்பினர்களையும் எதிர்ப்பு வாதமாக கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிரசாரங்களை முன்னெடுத்தபோதிலும் கோறளைப்பற்று பிரதேசசபையினை தக்கவைப்பதற்காக அதே முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவினைகோரி நிற்பதாகவும் இதனை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கோறளைப்பற்று பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்,ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் கலந்துகொண்டனர்.