யாழ். கோப்பாயில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

Report Print Jeslin Jeslin in சமூகம்

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வெகு உணர்ச்சிபூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டு வருகின்றன.

இதன்போது, பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கண்ணீருடன் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செய்து வருகின்றனர்.