யாழ்.சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள்

Report Print Malar in சமூகம்

யாழ்.சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்பூர்வமாக நடைபெற்று வருகிறது.

மாவீரர் நாளை எழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட்டு, கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இதில் பொதுமக்கள் உட்பட பாதிரியார்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.