நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

Report Print Malar in சமூகம்

நியூசிலாந்து நாட்டில் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சி பூர்வமாக நடைபெற்றுள்ளன.

நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரில் Mt Roskill war memorial மண்டபத்தில் இன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பொதுச்சுடர் மாலை 6.30 மணியளவில் ஏற்றலுடன் வீரவணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின

நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியினை வழக்கறிஞர் பிரேம் குமார் ஏற்றிவைக்க, இதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் ரொபின் ஏற்றிவைத்தார்.