அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னாரில் எழுச்சிபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நினைவஞ்சலி

Report Print Banu in சமூகம்

மன்னார் - பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தலுக்கு பல்வேறு வகையிலும் தடைகளும், அச்சுறுத்தல்களும் வந்த போதும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க வேண்டாமென இராணுவத்தினர் இரண்டு நாட்களாக பல அச்சுறுத்தல்களை நேரடியாக விடுத்திருந்தனர்.

இருந்தபோதிலும் அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் பக்கபலமாக நின்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்.

கண்ணீருக்கு மத்தியில் ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவுகள்

மன்னார் மாவட்ட மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் கண்ணீருக்கு மத்தியில்உணர்வெளிச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் இன்று மாலை இடம் பெற்றது.

இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பண்டிவிருச்சானை சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொண்ணுச்சாமி ராமநாதன் என்பவரால்பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்காணவர்கள்கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினை வேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

இறுதியில் மாவீரர்களின்நினைவாக குடும்பத்தினருக்கு தென்னங் கண்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தினம் நினைவுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.