மட்டக்களப்பிலும் உயிர்நீத்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலிகள்

Report Print Kumar in சமூகம்

தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் இன்றையதினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் இன்று மாலை 06.5 மணிக்கு பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேர்த்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

பிரதான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டு பின்னர் உயிர்நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு கண்ணீர்மழைக்கு மத்தியில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.