அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈச்சங்குளத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

2007ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முதலாக வவுனியா, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

நேற்று மாலை ஈச்சன்குளம் துயிலும் இல்ல அலங்கார வேலைகள் இராணுவ பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

அலங்காரங்கள் இரவோடு இரவாக இராணுவத்தினரால் அகற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நினைவு தின ஏற்பாடுகள் பூரத்தியாகியிருந்தன.

அந்தவகையில் ஈச்சன்குளம் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, தற்போது அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6.05 மணிக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றல் இடம்பெற்றுள்ளது.