தாயக நினைவுகளுடன் பிரித்தானியாவில் திறந்த வௌியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

Report Print Dias Dias in சமூகம்

பிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.

பிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடி வணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரித்தானிய வரலாற்று மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடர் புலம் - தமிழீழ தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டன.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மண்டபங்கள் எதுவும் இல்லாமல் பொது வெளியில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டமையானது தாயக உணர்வையும் தாயக மாவீரர் நினைவுகளையும் ஏற்படுத்தியிருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.