முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்!

Report Print Vanniyan in சமூகம்

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது .

படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மக்கள் வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர்.