திருகோணமலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் வழமையாக சிவன் கோயிலுக்கு அருகில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நினைவேந்தல் இம்முறை அனுஷ்டிக்கப்படவில்லையெனவும், சிவன் கோயிலை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் தமிழ் உறவுகளுக்காக தம்மை வித்திட்டவர்களை நினைவு கூற பயந்து இருந்தபோதும் திருகோணமலையில் இவ்வாறான நினைவேந்தலை செய்ய வேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் தலைவி பயமின்றி இந்நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.