ஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள்

Report Print Vanniyan in சமூகம்

ஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது .

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் லெப் கேணல் நிலான் அவர்களின் துணைவியார் ஏற்றினார். சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மாவீரர்கள் மற்றும் தளபதிகளுக்கான அஞ்சலியை பெரும் திரளான பொது மக்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினர் இணைந்து ஏற்றினர்.

தாயகப் பரப்பில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.