கண்ணீரால் கரைந்தது தேராவில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம்

Report Print Suman Suman in சமூகம்

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களின் கண்ணீரோடு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், உணர்வெழுச்சியுடன் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் கடற்கரும்புலி மேஜர் மதன்,மேஜர் சுடர்வண்ணன், விரவேங்கை அறிவழகன் ஆகிய மாவீரர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன் ஏற்றியுள்ளனர்.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டன.

இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers