அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள்!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் (27) இன்றைய நாள் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 06.05மணிக்கு, மணிஓசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் இடம்பெற்று. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

நாட்டுப்பற்றாளரின் மனைவியும், மூன்று மாவீரர்களின் தாயாரும், மாவீரர் லெப் கேணல் நவம் அவர்களின் சகோதரியான மகேஸ்வரன் யோகராணி என்பவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றிவைத்தார்.

சம நேரத்தில் ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களாலும், சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவாக, மாவீரர்களின் உறவினர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான மாவீரர்களினுடைய உறவினர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.