கிழக்குப் பல்கலையில் அணி திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.05 மணியளவில் சுடர்கள் ஏற்றப்பட்டு மாணவர்கள் தமது நினைவஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் மாவீரர் தினத்தை மெழுகுதிரிச் சுடரேற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.

வடக்கு கிழக்கு தாயகப் பரப்பில் பொது மக்கள் தங்கள் கண்ணீரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.