கிளிநொச்சி முழங்காவில் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நினைவு நாள்!

Report Print Yathu in சமூகம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றைய தினம் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான பொது மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1750 ஈகைச்சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.