மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று மாலை இடம் பெற்றது.

மிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்தனர்.

இதில் பெருந்திரலான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.