ராஜித சேனாரட்னவை உடன் கைது செய்யுமாறு கோரிக்கை!

Report Print Murali Murali in சமூகம்

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட சுகாதார அதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த தகவல்கள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அகுலுகல்லே சிறி ஜினாநந்த தேரர் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

புற்றுநோய் தொடர்பான ஒளடதங்களை கொண்டுவரும்போது சுமார் 3.8 பில்லியன் ரூபா அளவிலான பணம் மோசடி செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில், பௌத்த தகவல்கள் கேந்திர நிலையம் கடந்த 25ம் திகதி முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இது குறித்து , வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அகுலுகல்லே சிறி ஜினாநந்த தேரர், இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துபோது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட சுகாதார அதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.