மாவீரர்களிற்கு சுடர் ஏற்றிய பொன் தியாகம்! உணர்வெழுச்சியுடன் மக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

தமிழீழ மாவீரர் உலகம் முழுவதும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாகவும் உணர்வெழுச்சியுடனும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தின் வடக்கு கிழக்கில் ஏராளமான பொது மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு தங்கள் அஞ்சலியினை செலுத்தியுள்ளனர்.

அதேவேளை, வடக்கு கிழக்கில் அமைந்துள்ள தமிழர் பல்கலைக்கழகமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் உணர்வெழுச்சியோடு மாவீரர் நாளை அனுஷ்டித்துள்ளனர்.

இந்நிலையில் புலம் பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஏராளமான ஈழ உணர்வாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு மாவீரர் நாளை அனுஷ்டித்துள்ளனர்.

இதன்போது மூன்று மாவீரர்களின் தந்தையான பொன். தியாகம் நாம் தமிழர் பிரதான மேடையில் மாவீரர்களிற்கு சுடர் ஏற்றிய அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.