பொலிஸாரை கண்டதும் போதைப்பொருள் பக்கட்டுக்களை விழுங்கிய பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

அனுராதபுரத்தில் ஹெரோயின் பக்கட் தயாரித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் சுற்றி வளைத்தமையினால் பெண்ணொருவர் அதனை விழுங்கியுள்ளார்.

அநுராதபுரம் மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தை மற்றும் அனுராதபுரம் - யாழ்ப்பாணம் வீதி சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தையில் தங்கியிருந்த பெண்ணே இவ்வாறான மோசமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த பெண் ஹெரோயின் பக்கட் தயாரிப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் நுட்பமாக பெண்ணின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். பெண்ணை கைது செய்ய பொலிஸார் சென்ற போது அவர் தயாரித்துக் கொண்டிருந்த ஹெரோயின் பக்கட்களை பாரியளவில் விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணால் பக்கட் தயாரிக்க முடியாமல் போன எஞ்சிய ஹெரோயியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரான பெண் ஒரு காலை இழந்த ஊனமான நபர் எனவும் அவரது கணவனுடன் இணைந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 42 வயதுடைய பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.