யாழ்தேவி விபத்து தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு

Report Print Banu in சமூகம்

யாழ்தேவி புகையிரத விபத்து குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் பணிப்பாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் காங்கேசன்துறையிலிருந்து - கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் கல்கமுவ - அம்பேபுச பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதனால் வடபகுதிக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,

விபத்திற்குள்ளான புகையிரதத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதுடன், புகையிரத பாதையை பழுதுபார்க்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு பாதையில் புகையிரத சேவைகள் அம்பன்பொல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ரயில்கள் கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.