எரிபொருள் நிலைய ஊழியரொருவர் மீது விபத்தினை ஏற்படுத்தி விட்டு வாகன சாரதி தப்பியோட்டம்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியரொருவரை வானொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கந்தளாய், பராக்கிரம மாவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை வானொன்று திருகோணமலையிருந்து, கொழும்புக்குச் சென்ற வேளையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியரை மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் குழாயினுள் இறங்கி எரிபொருள் அளவினை குறித்த ஊழியர் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது வேகமாகச் சென்ற வானொன்று மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.