திருகோணமலையில் தொடரும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்தும் பெய்து வருகின்ற அடை மழையின் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழையின் காரணமாக கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவில் எட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், வான்எல, வென்ராசன், பதவிய, சீனிபுர, மற்றும் கல்மெட்டியாவ குளங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற அதேவேளை விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.