சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பான சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர்கள் அவரது விருப்பமின்றி வான் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்று விசாரணை நடத்தியமை தொடர்பாக பொலிஸார் மற்றும் குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த விசாரணைகளுக்கு சுவிஸர்லாந்து தூதரகத்தில் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.