நந்திக்கடல் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியில்!

Report Print Mohan Mohan in சமூகம்

ஐந்து மாதங்களின் பின்னர் இன்று நந்திக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக நத்திக்கடல் பகுதியில் நீர் வற்றியிருந்தது.

இதனால் நந்திக்கடலையே வாழ்வாதாரமாக நம்பியிருந்த சுமார் 700க்கு மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் அடை மழை காரணமாக நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் மீனவர்கள் இன்று மீன்பிடித்தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் நந்திக்கடலின் நீர்மட்டம் மேலும் உயர்வடைந்து பெருங்கடலுடன் சங்கமிக்கும் வரை அதிகளவிலான மீனவர்களினால் இப்பகுதியில் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.