மாவீரர் தினத்தில் துண்டுபிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடைய புகைப்படம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை விநியோகித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த துண்டுபிரசுரத்தில் மலையகமும் எழுச்சியும், எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த துண்டுபிரசுரத்தினை கணிணி ஊடாக அச்சிட்ட நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்

சந்தேகநபர்கள் இருவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்துவதுடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்