யாழில் திடீர் சோதனையின் போது வெடி மருந்துக்கள் மீட்பு!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - பாசையூர், அந்தோணியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதுடன், இதன்போது இரண்டு கிலோ வெடி மருந்துகளை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இந்த வெடி மருந்துக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வெடி மருந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்களுக்காக கொண்டு வரப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.